மோசடிகள் (Frauds) மற்றும் சூழ்ச்சிகள் (scams)

முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக, மோசடிகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எவரும் உள்ளாகலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக மோசடி செய்பவர்கள் பெரும் முயற்சி எடுப்பார்கள்.

பொதுவான சில சூழ்ச்சிகள்:

மிரட்டிப் பணம்பறிக்கும் சூழ்ச்சி என்பது ஒருவர் தனது ஆதாயத்துக்காக, உங்களை மிரட்டி, வற்புறுத்தி அல்லது அச்சுறுத்தி  உங்களிடமிருந்து பணத்தை அல்லது அந்தரங்ககத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாகும்.

தொடர்பிலிருப்பவர்களின் மோசடி என்பது மோசடியின் ஒரு வடிவமாகும், இதில் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளவர்களை அவர்கள் சார்ந்த குழு அல்லது சமூக அமைப்பு மூலம் அணுகுவார்கள். இந்தக் குழுக்கள் மதக் குழுக்கள், இனக் குழுக்கள் அல்லது தொழிற்சங்கங்கள் அல்லது இராணுவம் போன்ற தொழிலாளர் சமூகங்களாகவும் கூட இருக்கலாம்.

மோசடி செய்யும் ஒருவர், சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களைத் தொடர்புகொண்டு, உங்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெறுவதற்காக மெய்நிகர் வழியான இணைய உறவொன்றில் இணையும்படி உங்களைத் தூண்டுவார். உங்களின் நம்பிக்கையை அந்த மோசடியாளர் பெற்றுக்கொண்டதும் உங்களிடம் பணம் கேட்பார் அல்லது நீங்கள் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு உதவ முடியும் என்று கூறுவார்.

கிரிப்டோ சொத்து முதலீடுகளில் அதிக வருமானம் பெறலாமென மோசடி செய்பவர்கள் உறுதியளிக்கிறார்கள். கிரிப்டோ வர்த்தகத் தளத்துடன் முதலீட்டுக் கணக்கை நீங்கள் திறக்க வேண்டியிருக்கலாம். நீங்கள் கணக்கைச் சரிபார்க்கும்போது பணமோ அல்லது கிரிப்டோ சொத்து முதலீடோ அங்கிருக்காது. ஏதாவது ஒன்று உண்மையாக இருக்கமுடியாது எனச் சந்தேகம் வந்தால், அனேகமாக அது உண்மையாக இருக்கமாட்டாது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

அடையாளத் திருட்டு என்பது மோசடி செய்வதற்காக உங்களின் தனிப்பட்ட தகவல்களை இன்னொருவர் பயன்படுத்தல் ஆகும். உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு, உங்களின் கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு, கணக்கு ஒன்றைத் திறப்பதற்கு அல்லது கடனுக்கு அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களான பெயர், சமூகக் காப்புறுதி இலக்கம், கடன் அட்டை இலக்கம், அல்லது பிற தகவல்களை உங்களுக்குத் தெரியாமல் அவர்கள் பயன்படுத்தக்கூடும்.

வரிவிலக்களிக்கப்படும் நிதிப்  பத்திரங்கள் மோசடிகள் அல்ல. ஆனால் சில மோசடியாளர்கள் மோசடி முதலீடுகளை “விலக்கு” அளிக்கப்படும் பத்திரங்களாகப் பயன்படுத்துகின்றனர். சிறப்பு ஒப்பந்தமொன்றில் நீங்கள் பங்கேற்பதற்காக விலக்களிப்பதாக அவர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும். பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவிருக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு வணிகத்தைப் பற்றிய உள்ளார்ந்த குறிப்புப் பற்றிய தொலைபேசி அழைப்பொன்று நீங்கள் கோராமலேயே உங்களுக்குக் கிடைத்தால் சந்தேகப்படுங்கள், அத்துடன் சரிபார்ப்பதற்காக உங்களின் உள்ளூர் நிதிப் பத்திரக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்புகொள்ளுங்கள்.

அனேகமாக கற்கைநெறிகள் அல்லது மென்பொருள்கள் ஊடாக அந்நியச் செலாவணிச் சந்தையை எளிதாக அணுகுவதை அந்நிய செலாவணி விளம்பரங்கள் ஊக்குவிக்கின்றன. ஆனால், அந்நியச் செலாவணி வர்த்தகத்தை, அதிக பயிற்சிபெற்ற பணியாளர்கள், முன்னணி தொழில்நுட்பத்துக்கான மற்றும் பெரிய கணக்குகளுக்கான அணுகையைக் கொண்ட பெரிய, சிறப்பான வளங்களைக் கொண்ட சர்வதேச வங்கிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிபுணர்களை வெல்வது மிகவும் கடினமாகும்.

“கடல்கடந்து” இன்னொரு நாட்டிற்கு உங்களின் பணத்தை அனுப்பினால் பெரும் லாபம் கிடைக்குமென இந்த மோசடி உறுதியளிக்கிறது. வழக்கமாக உங்களின் வரிகளைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதுதான் குறிக்கோள், ஆனால் வரி, வட்டி மற்றும் அபராதம் ஆக அரசாங்கத்துக்குப் பணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன், ஏதாவது தவறு நடந்தால், கனடாவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு உங்களின் வழக்கை எடுத்துச் செல்லமுடியாது.

உங்களின் கடவுச்சொற்கள் அல்லது வங்கித் தகவல்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக அந்நியர் ஒருவர் நம்பகரமான ஒருவராக தன்னைக் காட்டிக் கொள்ளும்போது phishing நிகழ்கிறது. இணைப்பொன்றை அல்லது இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை உங்களை அழுத்தும்படி கேட்கும் ஒரு மின்னஞ்சலாக அல்லது செய்தியாக இது வரலாம். ஒரு நிதி நிறுவனமாக அல்லது அரசு நிறுவனமாக அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்ளக்கூடும். இது போன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி, அவற்றை நீக்கிவிடுவதுதான்.

இந்தத் திட்டங்கள், வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும் அல்லது $10 ஐ சில வாரங்களிலேயே $20,000 ஆக மாற்ற முடியும் என்பது போன்ற உறுதிகளை வழங்குகின்ற விளம்பரங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக மக்களை தங்களுடன் இணைத்துக்கொள்கின்றன. அல்லது, பெரியதொரு முதலீட்டில் பணக்காரர்களாகப் போகும் முதலீட்டாளர்கள் சிறப்புக் குழுவில் சேர உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதற்கான அழைப்பு உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்துகூட உங்களுக்கு வரலாம்.

குறைந்த விலையிலுள்ள பங்குகளை விளம்பரப்படுத்த மோசடி செய்பவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், இந்த மோசடியைச் செய்பவர் ஏற்கனவே இந்த பங்குகளில் ஒரு பெரிய தொகையை வைத்திருப்பார். நீங்களும் ஏனைய முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கும்போது, பங்குகளின் பெறுமதி உயரும். உச்ச விலையில், இந்த மோசடி செய்பவர் தனது பங்குகளை விற்பார், பின்னர் பங்குகளின் பெறுமதி மிக விரைவாகக் குறைந்து, பெறுமதியற்ற பங்குகளுடன் நீங்கள் விடப்படுவீர்கள்.

இந்த மோசடியில், ஒரு பொருள் அல்லது சேவைக்குக் கணிசமானளவு அதிக வருமானம் கிடைக்கும் என்ற உறுதிமொழியுடன் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பணத்தை முன்கூட்டியே செலுத்தும்படி பாதிக்கப்படக்கூடியவர்  வற்புறுத்தப்படுகிறார். ஆனால் அந்த மோசடி செய்பவரே அந்தப் பணத்தை எடுத்துக்கொள்கிறார், பின்னர் பாதிக்கப்பட்டவருடன்  அவர் எந்தத் தொடர்பும் வைத்திருக்க மாட்டார். ஆபத்தான முதலீடுகளில் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் பெரும்பாலும் குறிவைக்கப்படுகிறார்கள்.


மோசடிகளைத் தவிருங்கள்

எவற்றைக் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பது மோசடியில் பணத்தை இழப்பதைத் தவிர்க்க உதவும்.

மோசடி தொடர்பான அபாய எச்சரிக்கைகள்

உங்களுக்குத் தெரியாத ஒருவர் கோரப்படாத சலுகை அல்லது வாய்ப்புத் தொடர்பாக உங்களைத் தொடர்புகொண்டால் சந்தேகப்படுங்கள். அந்த நபர் உங்களை ஏன் தொடர்பு கொள்கிறார் என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் இணைப்புகளுக்கோ அல்லது இணைக்கப்பட்டவற்றுக்கோ பதிலளிக்கவோ அல்லது அவற்றை அழுத்தவோ வேண்டாம். தகவல்கள் எதையும் நீங்கள் வழங்குவதற்கு முன்பாக யாருடன் நீங்கள் தொடர்புகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுங்கள். நிறுவனத்திற்கான தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பார்த்து, உண்மையிலேயே அந்த நிறுவனத்தில் அந்த நபர் பணிபுரிகிறாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அதனை அழையுங்கள்.

குறைந்த ஆபத்துள்ள அல்லது ஆபத்து இல்லாத அதிக வருமானம் கொண்ட முதலீடு பற்றி உங்களுக்கு யாராவது உறுதியளித்தால், அவர்கள் வழங்கும் முதலீடு ஒரு மோசடியாக இருக்கலாம். பொதுவாக, ஒரு முதலீட்டின் சாத்தியமான வருமானம் அதிகமெனில், அந்த முதலீட்டில் அதிக ஆபத்தும் இருக்கும்.

“முக்கியமான உதவிக்குறிப்பு” அல்லது உள்ளார்ந்த தகவல்கள் கூறுபவர்கள் உங்களின் நலன்களை மனதில் வைத்திருக்கவில்லை. உங்களுக்கு அவர்கள் ஏன் உதவிக்குறிப்புகளை வழங்குகிறார்கள், அவற்றைப் பற்றி உங்களுக்குச் சொல்வதன் மூலம் அவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். உண்மையிலேயே ஒரு பொது நிறுவனத்தைப் பற்றிய உள்ளகத் தகவலாக அது இருந்தால், உள்ளார்ந்த வர்த்தகச் சட்டங்களின் கீழ் அப்படிச் செயல்படுவது சட்டவிரோதமானது.

உங்களின் பணத்தை விரைவாகப் பெறுவதற்காகவும், பின்னர் ஏனைய பாதிக்கப்படக்கூடியவர்களிடம் செல்வதற்காகவும் மோசடி செய்பவர்கள் உயர் அழுத்த விற்பனைத் தந்திரங்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். உடனடியாக முடிவெடுக்கும்படி உங்களிடம் கேட்கப்பட்டாலோ அல்லது வரையறுக்கப்பட்ட நேரச் சலுகை வழங்கப்பட்டாலோ மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

முதலீடு செய்வதற்கு முன், அந்த முதலீட்டை உங்களுக்கு வழங்கும் நபரின் பதிவை நீங்கள் சரிபாருங்கள். பொதுவாக, நிதிப் பத்திரங்களை விற்பவர்கள் அல்லது முதலீட்டு ஆலோசனைகளை வழங்குபவர்கள் தங்களை மாகாணப் பத்திரக் கட்டுப்பாட்டாளரிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.

முதலீட்டு மோசடியைத் தவிர்த்தல்


உங்களின் தகவல்களைப் பாதுகாத்தல்

நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டைத் தவிர்ப்பதற்காக உங்களின் நிதித் தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பதை அறிந்திருங்கள்.

மோசடியைப் பற்றி மேலும் அறியுங்கள்

முதலீடு செய்வதற்கு முன் சரிபார்க்கவும்

முதலீட்டு மோசடியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, முதலீடு ஒன்றை அல்லது முதலீட்டு ஆலோசனையை உங்களுக்கு வழங்குபவர்கள் அவ்வாறு செய்வதற்காகப் பதிவு செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

பொதுவாக, நிதிப் பத்திரங்களை விற்கும் அல்லது முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் எவரும் தங்களின் சேவைகளை வழங்கும் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பத்திர ஒழுங்குமுறை நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒன்ராறியோ முதலீடுகள் கட்டுப்பாட்டு ஆணையம் (Ontario Securities Commission) போன்ற முதலீட்டுக் கட்டுப்பாட்டாளர்கள், முதலீடுகளை விற்பதற்கு அல்லது பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்குத் தகுதியுள்ள நபர்களை அல்லது நிறுவனங்களை மட்டுமே பதிவுசெய்வதால், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்குப் பதிவு உதவுகிறது.

பதிவு செய்ய என்ன தேவை?

பதிவு செய்வதற்குக் குறிப்பிட்ட கல்வி மற்றும் அனுபவத் தகைமைகளைத் தனிநபர்கள் பூர்த்திசெய்ய வேண்டும். இந்தத் தகைமைகள் ஒரு தனிநபர் எந்த வகையான பதிவுக்கு விண்ணப்பிக்கிறார் என்பதைப் பொறுத்திருக்கும். ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு தகைமைகள் உள்ளன அத்துடன் அவை வெவ்வேறு செயல்பாடுகளை அனுமதிக்கின்றன.

குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நேர்மை மற்றும் நல்ல நம்பிக்கையை உள்ளடக்கிய நாணயத்துடன் நடக்க வேண்டும். பின்னணி மற்றும் காவல்துறைச் சோதனைகளுக்குத் தனிநபர்கள் உட்படுத்தப்படுகிறார்கள், அத்துடன் நிறுவனங்களும், பதிவுசெய்த அனைத்து நபர்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் பதிவைப் புதுப்பிக்க வேண்டும்.

தினசரி அடிப்படையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான மூலதனம் மற்றும் காப்புறுதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் கடனைத் தீர்க்கக்கூடிய திறனை நிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள் என்றோ அல்லது பணத்தை இழக்க மாட்டீர்கள் என்றோ பதிவு உத்தரவாதம் அளிக்காது.

பதிவைச் சரிபார்ப்பது விரைவானது மற்றும் எளிதானது. தேசியப் பதிவுத் தேடல் (National Registration Search) கருவியைப் பயன்படுத்தி, பதிவு நிலையைச் சரிபார்த்து, முதலீட்டுத் துறையில் உள்ளவர்களின் அல்லது வணிகங்களின் ஒழுக்க வரலாற்றைப் பரிசீலியுங்கள்.

வணிகம் அல்லது தனிநபரின் பதிவை இப்போதே சரிபாருங்கள்