வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்துடன் தொடர்பான நிதிரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சில ஆதாரவளங்கள் இங்கே உள்ளன.


ஓய்வுகாலத் திட்டமிடல்

எவ்வகையான வாழ்க்கை முறையை நீங்கள் விரும்புகிறீர்கள், எவ்வளவு சேமிக்க வேண்டும் மற்றும் வேலையை நிறுத்திய பின்னர் உங்களின் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பவற்றை நீங்கள் தீர்மானிப்பதற்கு ஓய்வுகாலத் திட்டம் உதவுகிறது. ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது, உங்களின் ஓய்வூதியக் காலத்தை நீங்கள் அனுபவிக்கக்கூடியதாக இருப்பதற்காக உங்களின் பணத்தை நிர்வகிப்பதாகும். உங்களின் ஓய்வுகாலத் திட்டம், உங்களின் நிதியின் யதார்த்தத்துடன் உங்களின் தேவைகள், விருப்பங்களைச் சமநிலையில் வைத்திருக்கவேண்டும்.

ஓய்வுகாலத் திட்டத்தை வைத்திருப்பதற்கான 3 காரணங்கள்

  1. இலக்குகளை அமைத்தல். வேலைசெய்வதை நீங்கள் நிறுத்த விரும்பும் வயது மற்றும் உங்களின் வாழ்க்கை முறை உள்ளடங்கலான ஓய்வு கால இலக்குகளை அமைப்பதற்கு ஒரு திட்டம் உதவலாம்.

  2. எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை அறிந்திருத்தல். ஓய்வுகாலத்தில் செளகரியமாக வாழ்வதற்கு எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பதைக் கண்டறிவதற்கு இது உதவலாம்.

  3. எதில் முதலீடு செய்யவேண்டும் என்பதைத் தெரிந்தெடுத்தல். உங்களின் இலக்குகள் மற்றும் ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் முதலீட்டுத் தெரிவுகளுக்கு ஒரு திட்டம் வழிகாட்டலாம்.

சேமிப்புத் திட்டங்களைப் பரிசீலியுங்கள்

சேமிப்பு

நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது 3 விடயங்களில் தங்கியுள்ளது:

எப்போது நீங்கள் சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்பது, நீங்கள் எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தொடங்கும்போது எவ்வளவு இளையவராக நீங்கள் இருக்கிறீர்களோ அந்தளவுக்குக் குறைந்தளவு பணத்தை நீங்கள் ஒதுக்கலாம், கூட்டு வட்டிக்கு நன்றி. இந்தக் கல்குலேட்டரைப் பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு சேமிக்கலாம் என்பதைப் பாருங்கள்.

நீங்கள் வீட்டிலே இருக்கத் திட்டமிடுகிறீர்களா அல்லது உலகம் முழுவதும் பயணம்செய்யத் திட்டமிடுகிறீர்களா? நீங்கள் சேமிக்க வேண்டிய தொகை, நீங்கள் ஓய்வெடுக்கும்போது நீங்கள் வாழத் திட்டமிடும் வாழ்க்கையில் தங்கியிருக்கும்.

கனடா ஓய்வூதியத் திட்டம் (CPP), முதியோர் பாதுகாப்புத் திட்டம் (Old Age Security – OAS) மற்றும் உத்திரவாதமுள்ள வருமான நிரப்பி (GIS) போன்ற அரசாங்க ஓய்வூதிய நிவாரணங்களுக்கு உங்களுக்கு உரிமம் இருக்கலாம். இந்த அரசாங்கத் திட்டங்களிலிருந்து வருமானம் பெறுவதற்கு உங்களுக்குத் தகுதியிருந்தால், நீங்கள் அதிகம் சேமிக்க வேண்டியதில்லை.

முதியோர் வரிக் கடன் (seniors tax credit) பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவரா?

ஒரு முதியோராக, குறிப்பிட்ட வரிச் சலுகைகளுக்கான தகுதி உங்களுக்கு இருக்கலாம். மருத்துவச் செலவுகள் மற்றும் பராமரிப்பாளர் செலவுகள் போன்ற செலவுகளையும் நீங்கள் கோரக்கூடியதாக இருக்கலாம்.

மேலும் அறியுங்கள்

உயில்கள் மற்றும் சொத்துத் திட்டமிடல்

சொத்துத் திட்டமிடல் என்பது உங்களின் சொத்துக்களை யாருக்கு, எப்போது கொடுக்க விரும்புகிறீர்கள் (உங்களின் வாழ்நாளில், மரணத்தின்போது அல்லது மரணத்திற்குப் பின்னர்) என்பதை அடையாளம் காண்பதை உள்ளடக்கியுள்ளது.

உங்களின் சொத்துத் திட்டம் பின்வருவனவற்றையும் உள்ளடக்கலாம்:

  • நீங்கள் இறந்துவிட்டால் அல்லது உங்களின் விவகாரங்களை நிர்வகிக்க முடியாமல் போனால் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான வழிகள்,

  • நீங்கள் அல்லது உங்களின் சொத்துகள் செலுத்தக்கூடிய வரிகளைக் குறைப்பதற்கான படிமுறைகள், மற்றும்

  • வணிகத்தில் உங்களின் உரிமைப் பங்கை விற்பதற்கான அல்லது மாற்றுவதற்கான திட்டம்.

சொத்துத் திட்டமிடலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள்

உயில் என்பது சொத்துத் திட்டமிடலின் முக்கியமான அம்சமாகும், ஆனால் உங்களின் திட்டம் பின்வருவனவற்றையும் உள்ளடக்கலாம்:

உயில்கள் மற்றும் சொத்துத் திட்டமிடல் பற்றி மேலும் அறியுங்கள்

முதியோர் நிதிரீதியாகத் துன்புறுத்தப்படல்

ஆரோக்கியம், நடமாட்டம் அல்லது அறிவாற்றல் மாற்றங்களுடன் சேர்ந்ததாக முதுமை இருக்கலாம், அது வாழ்க்கையின் பிற்காலத்தில் ஒருவரின் முடிவெடுக்கும் திறனை பாதிக்கலாம், அத்துடன் நிதிச் சுரண்டல் மற்றும் மோசடிக்கு அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையை உருவாக்கலாம்.

இந்தக் காரணிகள் வெவ்வேறு நபர்களை அவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பாதிக்கலாம் என்பதையும் அவை குறிப்பிடத்தக்களவில் வேறுபட்ட அளவில் இருக்கும் என்பதையும் அங்கீகரிப்பது முக்கியமாகும்.

ஒருவர் நிதியைக் களவாடுகிறார் அல்லது அவருக்கு நீங்கள் பணம் கொடுக்கும் வகையில், கணக்குகளை அணுகுவதற்கு அல்லது நிதிரீதியான அதிகாரத்தைப் பெறுவதற்காக உங்களுடன் சூழ்ச்சியாக நடக்கிறார் என்று நீங்கள் நம்பினால் அல்லது சந்தேகப்பட்டால், அந்த நடத்தையைத் தடுப்பதற்கு நீங்கள் எடுக்கக்கூடிய சில படிமுறைகள் இதோ:

ஒரு அயலவராகவோ, குடும்ப உறுப்பினராகவோ, ஆரோக்கியப் பராமரிப்புப் பணியாளராகவோ அல்லது உங்களின் சமூகத்தில் உள்ள வேறொருவராகவோ அவர் இருக்கலாம். நீங்கள் உதவி பெறுவதற்கு அவர் உங்களுக்கு உதவ முடியும்.

சந்தேகத்திற்கிடமான செயல்பாடு ஏதாவது உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்களின் வங்கி, முதலீடு மற்றும் ஓய்வூதியப் பதிவுகளைப் பரிசோதியுங்கள். பணமாக்கப்பட்ட காசோலைகளின் பிரதிகளையும் நீங்கள் கேட்கலாம். உங்களின் உயில், தத்துவப் பத்திரம் மற்றும் பிற முக்கியமான ஆவணங்களையும் நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம். ஏதாவது தெளிவில்லாமல் இருந்தால், உங்களின் வங்கியுடன் அல்லது நிதிக்கான பிரதிநிதியிடம் நேரடியாகப் பேசுங்கள்.

நிதிரீதியான உங்களின் நலன்களைக் கவனிக்க உதவும் நபர்கள் உள்ளனர். இது உங்களின் வழக்கறிஞரை அல்லது கணக்காளரையும் உள்ளடக்குகிறது.

மோசடி என்பது கடுமையான ஒரு குற்றமாகும், அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். சந்தேகத்திற்கிடமான செயலை விசாரிப்பதற்கும் சட்டத்தை மீறுபவர்கள் மீது குற்றம்சுமத்துவதற்கும் அவசரநிலை அல்லாத காவல்துறை ஊழியர்கள் உதவிசெய்ய முடியும்.

தொடர்புகொள்ளுங்கள்:
Seniors Safety Line (SSL):  1-866-299-1011.  தகவல்கள் மற்றும் ஆதரவுகளை 150க்கும் மேற்பட்ட மொழிகளில் இலவசமாகவும் ரகசியமாகவும் வழங்கும் ஒரு ஆதாரவளம், ஏழு நாள்களும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும்.

நிதிரீதியான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு

முதியோர் துன்புறுத்தல் பற்றியதொரு சிறந்த விளக்கத்தைப் பெறுவதற்கு, அனைத்து மாகாணங்களிலும் உள்ள கனேடியர்களுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் ஆதாரவளங்களைக் கொண்ட முதியோர் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான கனேடிய வலையமைப்பைப் (CNPEA) பார்வையிடுங்கள்.

மேலும் அறிய www.cnpea.ca ஐப் பார்வையிடுங்கள்