
நாங்கள் ஒன்ராறியோ முதலீட்டு உரிமைகள் ஆணையம் (Ontario Securities Commission (OSC)
ஒன்ராறியோ முதலீட்டு உரிமைகள் ஆணையமானது (Ontario Securities Commission OSC), ஒன்ராறியோவில் மூலதனச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொறுப்பு வகிக்கிறது.
முதலீட்டு உரிமைகள் சட்டம் (ஒன்ராறியோ) மற்றும் பண்டக எதிர்காலச் சட்டம் (ஒன்ராறியோ) ஆகியவற்றின் விதிப்பிரிவுகளுக்கு இணங்க OSC இதனை நிர்வகித்துச் செயற்படுத்துகின்றது. குறிப்பாக, முதலீட்டாளர்களைப் பாதுகாக்க நாங்கள் பணிபுரிகிறோம், நியாயமான மற்றும் திறமையான சந்தைகளை ஊக்குவிக்கிறோம், மேலும் ஒன்ராறியோவில் முதலீட்டு உரிமைகள் துறையைக் கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்குவதன் மூலமும் அவை பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதன் மூலமும் பொருளாதாரக் கொள்கையின் உறுதித்தன்மைக்குப் பங்களிப்புச் செய்கிறோம்.
முதலீட்டாளர் அலுவலகம் (www.InvestorOffice.ca) என்பது OSC-யின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் கிளை ஆகும். முதலீட்டாளர் அலுவலகம், மூலோபாய வழிகாட்டுதல்களை நிர்ணயிக்கிறது மற்றும் முதலீட்டாளர் ஈடுபாடு, கல்வி, தொடர்பேற்படுத்தல் மற்றும் ஆராய்ச்சியில் OSC இன் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த அலுவலகம் ஒரு கொள்கைச் செயற்பாட்டைக் கொண்டிருப்பதுடன், வங்கிச் சேவைகள் மற்றும் முதலீடுகள் தீர்ப்பாயத்தினை (Ombudsman for Banking Services and Investments (OBSI) மேற்பார்வையிடுவதில் ஒரு முக்கிய பங்கும் வகிக்கிறது, மேலும் OSC-யின் நடத்தை சார்ந்த உள்நோக்குகளிலும் முதலீட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் தலைமைத்துவத்தை வழங்குகிறது.