முதலீட்டுக்கான வழிகள்

மிகவும் பொதுவான சில வகையான முதலீடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:


ஆபத்து மற்றும் வருவாய்

ஆபத்து என்பது முதலீட்டின் உண்மையான வருவாய், எதிர்பார்க்கப்படும் வருவாயிலிருந்து வேறுபடக்கூடிய சாத்தியம் மற்றும் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் ஒரு பங்கை அல்லது முழுவதையும் இழக்கக்கூடிய சாத்தியம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

பல்வகைப்படுத்தல்

பல்வேறு முதலீடுகளுடனான பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை நீங்கள் வைத்திருந்தால், உங்களின் முதலீடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மோசமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும். சிறப்பாகச் செயல்படும் முதலீடுகளில் நீங்கள் சம்பாதிக்கும் லாபம், மோசமாக இருக்கும் முதலீடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுகிறது

வெவ்வேறு வகையான சொத்துக்களிலான கலப்பு முதலீட்டு வகைகளைக் கொண்டிருப்பது உங்களின் போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஒரே மாதிரியான ஆபத்து மற்றும் வருவாய்க்கான இயல்புகளைக் கொண்டிருக்கும் முதலீடுகள் சொத்து வகைகளின்படி குழுக்களாக்கப்படுகின்றன. மூன்று முக்கிய சொத்து வகைகள் உள்ளன:

சேமிப்புக் கணக்குகள், உறுதியளிக்கப்பட்ட முதலீட்டுச் சான்றிதழ்கள் (GICகள்), நாணயம், பணச் சந்தை நிதிகள் மற்றும் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் அரசாங்க மற்றும் நிறுவன நிதிப் பத்திரங்கள் போன்ற நிர்ணயிக்கப்பட்ட கால வைப்புகளை உள்ளடக்குகின்றது.

ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் முதிர்ச்சியடையும் அரசாங்க மற்றும் நிறுவன நிதிப் பத்திரங்கள், தெரிவுக்குரிய பங்குகள் மற்றும் பிற கடன் வழங்கல்களை உள்ளடக்குகின்றது.

பொதுவான பங்குகள், சில derivatives (உரிமைகள், உத்தரவாதங்கள், தெரிவுகள்), மாற்றத்தக்க நிதிப் பத்திரங்கள் மற்றும் மாற்றத்தக்க தெரிவுக்குரிய பங்குகளை உள்ளடக்குகின்றது.

முதலீட்டில் உள்ள ஆபத்துக்களின் வகைகள்

பல்வேறு வகையான முதலீடுகள் தொடர்பான ஆபத்துப்-பெறுமதிப் பரிமாற்றங்களைப் பார்ப்பதற்கு இந்த விளக்கப்படத்தைப் பார்க்கவும்.

ஊடாட்டமுள்ள முதலீட்டு விளக்கப்படம்

ஆலோசனை பெறல்

உங்களின் நிதி இலக்குகளை அடைய உதவும் முதலீடுகளை எவ்வாறு தெரிவுசெய்வது என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால், ஒரு ஆலோசகருடன் இணைந்து பணியாற்ற நீங்கள் விரும்பக்கூடும்.

சரியான ஆலோசகரைத் தெரிந்தெடுப்பது உங்களுக்கு என்ன உதவி தேவை என்பதைப் பொறுத்திருக்கும். உங்களுக்கு விசேடத்துவமான ஆலோசனை தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசகரைத் தேடுங்கள்.

பின்வருவனவற்றில் ஆலோசகர்கள் உதவ முடியும்:

  1. முதலீடு
  2. நிதித் திட்டமிடல்
  3. காப்புறுதி
  4. வரித் திட்டமிடல்
  5. சொத்துத் திட்டமிடல்

பரிந்துரைக்கக்கூடிய ஆலோசகர் எவராவது இருக்கின்றாரா என உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கேளுங்கள். சாத்தியமான பல ஆலோசகர்களைச் சந்தியுங்கள். அவர்கள் பதிவுசெய்திருக்கும் பிரிவைச் சரிபாருங்கள். உங்களின் நிதி இலக்குகளை அடைய உங்களுக்கு உதவுவதற்கான அனுபவம், நிபுணத்துவம் மற்றும் நற்சான்றிதழ்கள் உள்ளன என்று நீங்கள் நம்பும் ஒருவரைத் தெரிவுசெய்யுங்கள்.

ஆலோசனை பெறல் பற்றி மேலும் அறியுங்கள்