Ontario Securities Commission (ஒன்ராறியோ முதலீடுகள் கட்டுப்பாட்டு ஆணையம் OSC)

நியாயமான, வினைத்திறனான மற்றும் போட்டித்தன்மையுள்ள மூலதனச் சந்தைகளையும், மூலதனச் சந்தைகளில் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதற்காக, மூலதன உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைப்புரீதியான அபாயக் குறைப்புக்குப் பங்களிப்பதற்காக, நியாயமற்ற, முறையற்ற அல்லது மோசடியான நடைமுறைகளிலிருந்து முதலீட்டாளர்களுக்கு OSC பாதுகாப்பை வழங்குகிறது

முக்கியமாக, ஒன்ராறியோவில் உள்ள நிதிப் பத்திரத் துறையை நிர்வகிக்கும் விதிகளை உருவாக்கிச் செயல்படுத்துவதன் மூலம், OSC முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது.


எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

ஏதாவதொரு நிறுவனம், முதலீட்டுச் சாதனம் அல்லது உங்களின் நிதிப் பிரதிநிதியின் நடத்தை தொடர்பாக ஏதாவது கேள்வி அல்லது புகார் இருந்தால், ஒன்ராறியோ முதலீடுகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விசாரணைகள் மற்றும் தொடர்பு மையத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

அந்தக் குழுவினர் உங்களின் கேள்விகளுக்கு 200 க்கும் மேற்பட்ட மொழிகளில் பதிலளிக்க முடியும்

எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

உள்ளூர் (ரொறன்ரோ)

416-593-8314

கட்டணமற்றது (வட அமெரிக்கா)

1-877-785-1555

செவிப்புலனற்றோருக்கானது (TTY)

1-866-827-1295

தொலைநகல் (கேள்விகள் & புகார்கள்)

416-593-8122

மின்னஞ்சல்

inquiries@osc.gov.on.ca

விசாரணைகள் மற்றும் தொடர்பு மையம் உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும், அத்துடன் உங்களின் புகார் அல்லது விசாரணையை ஒன்ராறியோ நிதிப் பத்திரங்களுக்கான ஆணையத்தில் உள்ள மற்றொரு கிளைக்கு அனுப்பக்கூடும்.

நாங்கள் உதவிசெய்யலாம்

GetSmarterAboutMoney.ca

GetSmarterAboutMoney.ca என்பது ஒன்ராறியோ நிதிப் பத்திரங்கள் ஆணையத்தின் வலைத்தளமாகும், அது உங்களின் பணத்தைப் பற்றிய சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவும் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற தகவல்கள் மற்றும் நிதி தொடர்பான உதவிகளை வழங்குகிறது.

முதலீட்டுக்கான அடிப்படைகள், கனடாவில் கிடைக்கும் பல்வேறு வகையான முதலீட்டுக் கணக்குகள் மற்றும் முதலீட்டைத் தெரிந்தெடுப்பதற்கு முன்பாகக் கேட்க வேண்டிய கேள்விகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

GetSmarterAboutMoney.ca இல் கல்குலேட்டர்கள், தாள்கள் (worksheets) மற்றும் வினாடி வினாக்கள் (quizzes) உள்ளன.