முதலீட்டுக்கான வழிகள்
மிகவும் பொதுவான சில வகையான முதலீடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
பங்குகள் (Stocks)
ஒரு நிறுவனத்தில் பங்கை – அல்லது நிகர் பெறுமதியை (equity )- நீங்கள் வாங்கும் போது, நிறுவனத்தின் ஒரு பங்கை நீங்கள் சொந்தமாக்குகிறீர்கள்.
பங்குகளை நீங்கள் வாங்கும்போது அல்லது விற்கும்போது உங்களின் ஆலோசகருக்கு அல்லது முதலீட்டு நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்துகிறீர்கள். இந்தக் கட்டணம் தரகுப் பணம் (commission) என்று அழைக்கப்படுகிறது. பங்குகளில் உங்களின் முதலீட்டின் வருவாயைத்த் தரகுப் பணம் குறைக்கிறது.
இரண்டு முக்கிய வகையான பங்குகள் உள்ளன:
விற்கப்படும் பெரும்பாலான பங்குகள் பொதுவான பங்குகளாக இருக்கின்றன. பங்கு விலைகள் அதிகரிப்பு மற்றும் ஈவுத்தொகை அதிகரிப்பு மூலம் பண வளர்ச்சிக்கான சாத்தியத்தைப் பொதுவான பங்குகள் வழங்குகின்றன.
நிலையான ஈவுத்தொகைகள் மூலம் கிரமமான வருமானத்தையும் பங்கு விலை உயர்வு மூலம் பணவளர்ச்சிக்கான சாத்தியத்தையும் தெரிவுக்குரிய பங்குகள் வழங்குகின்றன. பொதுவான பங்குகளின் விலைகளைவிட தெரிவுக்குரிய பங்குகளின் விலைகள் நிலையானதாக இருக்கும்.
நீங்கள் முதலீடு செய்யத் தெரிந்தெடுக்கும் முதலீட்டு நிறுவனத்தைப் பொறுத்துப் பங்குகளை வாங்குவதற்கான கட்டணங்கள் மாறுபடலாம்.
முதலீட்டைச் செய்வதற்கான செலவுகளைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பங்குகள் பற்றி மேலும் அறியுங்கள்நிதி ஒப்பந்தப் பத்திரங்கள் (Bonds)
நிதி ஒப்பந்தப் பத்திரம் என்பது நீங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ வழங்கும் ஒரு வகையான கடனாகும். நீங்கள் ஒரு பத்திரத்தை வாங்கும்போது, பத்திரத்தை விற்பதற்கான செலவை ஈடுகட்டப் பத்திரத்தின் விலையை முதலீட்டு நிறுவனம் சற்று அதிகமாக நிர்ணயிக்கிறது.
நீங்கள் ஒரு நிதி ஒப்பந்தப் பத்திரத்தை வாங்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (காலம்) உங்களின் பணத்தை ஒரு நிறுவனத்துக்கு அல்லது அரசாங்கத்துக்கு (அந்தப் பத்திரத்தை வழங்குபவர்) நீங்கள் கடன் கொடுக்கிறீர்கள். முதிர்வுத் திகதிவரை நீங்கள் பத்திரங்களை வைத்திருந்தால், உங்களின் முழுப் பணத்தையும் நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வீர்கள். முன்கூட்டியே நீங்கள் விற்றால், பத்திர விலைகள் உயர்வாயிருப்பின், நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். விலை குறைந்திருந்தால் பணத்தை இழப்பீர்கள்.
பெரும்பாலான நிதி ஒப்பந்தப் பத்திரங்களில், நீங்கள் பத்திரத்தை வைத்திருக்கும்போது கிரமமான வட்டி உங்களுக்குக் கிடைக்கும். பெரும்பாலான பத்திரங்கள் மாறாத நிலையான வட்டி வீதத்தைக் கொண்டுள்ளன. சிலவற்றில் காலப்போக்கில் கூடும் அல்லது குறையும் மாறும் வீதங்கள் உள்ளன. பத்திரத்தின் முதிர்வுத் திகதியில், நீங்கள் வாங்கும்போது அவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த பெறுமதியை மீளப் பெறுவீர்கள்.
நிதி ஒப்பந்தப் பத்திரங்களின் வகைகள்
நீங்கள் இந்த பத்திரங்களை ஒரு குறித்த விலையில் மற்றும் குறித்தவொரு காலத்திற்கு வாங்குகிறீர்கள். பத்திரத்தை நீங்கள் வைத்திருக்கும்போது வழக்கமான வட்டி உங்களுக்குக் கிடைக்கும். முதிர்வுத் திகதியில், நீங்கள் வாங்கும்போது அவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த பெறுமதியை மீளப் பெறுவீர்கள்.
இந்தப் பத்திரங்கள் உங்களின் முதலீட்டின் வருவாயை மேம்படுத்தக்கூடிய சில அம்சங்களைக் கொண்டுள்ளன. இதில் strip, index மற்றும் உண்மையான return பத்திரங்கள் என்பன அடங்கும்.
பன்கூட்டு நிதியங்கள் (Mutual funds)
Mutual fund என்பது பலரிடமிருந்து பணத்தைத் திரட்டி, பங்குகள் மற்றும் நிதிப் பத்திரங்கள் போன்ற கலப்பு முதலீடுகளில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஆகும்.
Mutual fund வாங்குவதுடன் தொடர்பான கட்டண வகைகளில் விற்பனைக் கட்டணங்கள், பிற பரிவர்த்தனைக் கட்டணங்கள், கணக்குக் கட்டணங்கள் மற்றும் நிதிச் செலவுகள் ஆகியவை அடங்கும். நீங்கள் எந்த நிதியை வாங்குகிறீர்கள், எப்படி வாங்குகிறீர்கள் மற்றும் எந்தக் கணக்குகளில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வேறுபட்ட விற்பனைக் கட்டணங்கள், பிற பரிவர்த்தனைக் கட்டணங்கள் மற்றும் கணக்குக் கட்டணங்களை நீங்கள் செலுத்தக்கூடும். நீங்கள் நேரடியாக நிதிச் செலவுகளைச் செலுத்துவதில்லை, ஆனால் அவை நிதியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் குறைப்பதால் அவை உங்களைப் பாதிக்கின்றன.
பல்வேறு வகையான mutual funds உள்ளன. குறுகிய கால நிலையான வருமான நிதிப்பத்திரங்கள், பங்குகள், indexes அல்லது சமநிலையான கலவையில் அவர்கள் முதலீடு செய்யலாம். சில விசேடமான நிதியங்கள், சொத்துக்கள் அல்லது சமூகப் பொறுப்புள்ள முதலீடு போன்ற குறிப்பிட்ட விடயங்களில் கவனம் செலுத்தக்கூடும்.
Mutual funds பற்றி மேலும் அறியுங்கள்வர்த்தகப்பரிமாற்ற நிதியங்கள் (Exchange-traded funds)
ஒரு வர்த்தகப்-பரிமாற்ற நிதியம் (ETF) என்பது முதலீட்டாளர்களின் ஒரு குழுவிற்குச் சொந்தமான பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற முதலீடுகளின் சேகரிப்பை வைத்திருக்கும் ஒரு முதலீட்டு நிதியாகும், அத்துடன் ஒரு தொழில்முறைப் பண மேலாளரால் அது நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களைத் தெரிந்தெடுப்பதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பத்திரங்களில் முதலீடு செய்வீர்கள் என்பதே இதன் கருத்தாகும்.
Mutual funds போலன்றி, ETF நிதிகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.
ETFகளின் வகைகள்.
இந்த ETFகள் ஒரு அளவுகோலை (உதாரணமாக, TSX/S&P 60) நெருக்கமாகப் பின்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவை செயலற்ற முதலீடுகள் – அவை ஒரு குறியீட்டை (index) நெருக்கமாகக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அத்துடன் பொதுவாகக் குறைந்த ETF கட்டணம் மற்றும் செலவுகள் இருக்கும். இந்த ETFகள் அளவுகோலை விஞ்ச முயற்சிப்பதில்லை.
தீவிரமாக நிர்வகிக்கப்படும் ETFகள் குறியீட்டைக் கண்காணிக்காது. ETFஇன் முதலீட்டு நோக்கம் மற்றும் portfolio மேலாளரின் உத்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீவரமாக நிர்வகிக்கப்படும் ETFகள் முதலீடுகளை வாங்குகின்றன மற்றும் விற்கின்றன, அத்துடன் பொதுவாக index ETFகளை விட அதிக கட்டணங்களைக் கொண்டுள்ளன.
உத்தரவாதமுள்ள முதலீட்டுச் சான்றிதழ்கள் (GICs)
GIC என்பது ஒரு சிறப்பு வகையான வைப்புத்தொகையைப் போன்று செயல்படும் ஒரு முதலீடு ஆகும். நீங்கள் GIC ஐ வாங்கும்போது, நீங்கள் வைப்புச் செய்த தொகையைக் குறித்த காலத்தின் முடிவில் திரும்பப் பெறுவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் உள்ளது. இந்தக் காரணத்திற்காக, முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக GICகள் கருதப்படுகின்றன.
பெரும்பாலான GICகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையானதொரு வட்டி வீதத்தைக் கொடுக்கின்றன. காலக்கெடு முடிந்ததும், நீங்கள் செலுத்திய தொகையையும் வட்டியையும் பெறுவீர்கள். வழக்கமாக காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப நீங்கள் பெறும் வட்டி வீதமும் அதிகமாக இருக்கும். மாதந்தோறுமோ, முதிர்வுத் திகதியிலோ அல்லது இடைப்பட்ட இடைவெளிகளிலோ வட்டியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
GICகளில் ஆபத்துக் குறைவாக இருப்பதால், ஏனைய முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் வருமான வீதம் குறைவாக இருக்கக்கூடும். சில வருடங்களுக்குள்ளான உங்களின் நிதி இலக்குகளை ஆதரிக்க ஒரு குறுகிய கால முதலீடாக GICகள் இருக்கும்.
GICsகள் பற்றி மேலும் அறியுங்கள்Crypto சொத்துக்கள்
Crypto சொத்துக்கள் என்பது cryptography (தரவைப் பாதுகாப்பதற்கான ஒரு முறை), peer-to-peer network மற்றும் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்யும் ஒரு டிஜிட்டல் லெட்ஜர் அமைப்பு (digital ledger system) ஆகியவற்றைப் பயன்படுத்தும் எண்ணிம சொத்துக்கள் அனைத்துக்குமான ஒரு பொதுச் சொல்லாகும்.
எண்ணிம நாணயம் அல்லது ஏனைய crypto சொத்தை நீங்கள் வாங்குவதற்கு முன், அது என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துக்கள் என்ன என்பதை நீங்கள் விளங்கிக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Crypto சொத்துக்களின் பொதுவான வகைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
இது ஒரு எண்ணிம அல்லது மெய்நிகர் நாணயத்தைப் போன்று செயல்படும் நோக்கமுடையது, அத்துடன் இரு தரப்பினரிடையே பொருட்களின் விற்பனை, கொள்முதல் அல்லது வர்த்தகத்தை எளிதாக்கும். அதைச் சேமிக்க முடியும், மீளப்பெறலாம் மற்றும் பின்னொரு பொழுதில் பரிமாறிக்கொள்ளலாம். பாரம்பரிய நாணயங்களைப் போல, cryptocurrencies அரசாங்கத்தினால் அல்லது மத்திய வங்கியால் வழங்கப்படுவதுமில்லை, ஆதரிக்கப்படுவதுமில்லை. உதாரணத்துக்கு, bitcoin சந்தையில் மிகவும் பிரபலமான cryptocurrency ஆகும், ஆனால் பல்வேறு விபரக்குறிப்புகள் மற்றும் செயல்பாடுகளுடன் கூடிய பல்வேறு நாணயங்கள் உள்ளன.
இது பதிவேட்டில் வர்த்தகம் செய்து கண்காணிக்கக்கூடிய ஒரு வகை crypto சொத்து ஆகும். Utility tokens, governance tokens, security tokens மற்றும் non-fungible tokens எனப் பல வகையான digital tokens உள்ளன. அவற்றுக்குக் குறிப்பிட்ட செயல்பாடு, அனுமதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. உதாரணத்துக்கு, digital artwork (டிஜிட்டல் சித்திரவேலைப்பாடு) போன்ற ஒரு தனித்துவமான சொத்துக்கான உரிமையை non-fungible tokens முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கின்றன.
Crypto சொத்துக்களை நேரடியாக வாங்காமல், சொந்தமாக்காமல் அல்லது வர்த்தகம் செய்யாமல் அணுகுவதற்கு crypto நிதியங்கள் உங்களை அனுமதிக்கின்றன. இந்த நிதிகள் தொழில்நுட்பத்தில் திறனைக் காணும் முதலீட்டாளர்களை ஈர்க்கலாம், ஆனால் சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதில் சிக்கலை விரும்பாதிருக்கலாம்.
எதிர்பாராமல் மாறக்கூடியவையாக இருப்பதுடன் இந்த crypto சொத்துக்கள் மோசடி, சூழ்ச்சியுடனான கையாளுகை மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு ஆளாகலாம்.
சில crypto சொத்துக்கள் ஒன்ராறியோ செக்யூரிட்டி சட்டத்தின் கீழ் வரும், மற்றவை வரமாட்டா என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். பத்திரங்களை விற்பவர்கள் அல்லது முதலீட்டு ஆலோசனைகளை வழங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது மாகாண நிதிப் பத்திரக் கட்டுப்பாட்டாளரிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
Crypto சொத்துக்களை வாங்க அல்லது விற்க, crypto வர்த்தகத் தளத்தைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், நிதிப்பத்திரங்கள் ஆணையத்தில் பதிவைச் சரிபாருங்கள்.
Crypto சொத்துக்கள் பற்றி மேலும் அறியுங்கள்ஆதனச் சொத்துக்கள் (Real estate)
ஆதனச் சொத்துக்களில் முதலீடு செய்வது என்பது நிலவுடைமைச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்காக உண்மையிலேயே நீங்கள் சம்பந்தப்படுமொரு நடைமுறையாகும், பொதுவாக அதிக செலவானதாகவும் நிர்வகிக்க அதிக நேரம் தேவைப்படுவதாகவும் இது இருக்கும்.
முதலீடாக ஒரு சொத்தைச் சொந்தமாக வைத்திருப்பதால் செலவாகும் நேரம், பணம் மற்றும் வரக்கூடிய அபாயங்கள் காரணமாக, நிதிகள், trusts மற்றும் பிற முதலீட்டுத் தயாரிப்புகள் மூலம் ஆதனச் சொத்தில் முதலீடு செய்வதை நீங்கள் தெரிவு செய்யலாம். இதனால் நீங்களே சொந்தமாக நிர்வகிக்கவும் பராமரிக்கவும் வேண்டிய தேவையின்றி ஆதனச் சொத்துக்களில் முதலிட முடியும்.
பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் real estate company பங்குகள் போன்ற இவ்வகைச் சொத்துக்களை வாங்குவது, நீங்கள் எந்த சொத்துக்களையும் பராமரிக்காமல் real estate சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்று பொருள்படும்.
றியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கான இன்னொரு வழி நிலவுடைமை முதலீட்டு நம்பிக்கை நிதியம் (real estate investment trusts – REITs) ஆகவுள்ளது. அலுவலகங்கள், சேமிப்புக் களஞ்சியங்கள், வணிகத் தொகுதிகள் அல்லது அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்ற பல சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் REIT எனப்படுகின்றன. REITகள் பொதுவாக அபாயகரமான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை பரிமாற்றத்தில் பட்டியலிடப்படுவதற்குப் பதிலாக விலக்கு அளிக்கப்பட்ட சந்தையில் விற்கப்படுகின்றன.
ஆதனச்சொத்துக்களில் முதலிடுவது பற்றி மேலும் அறியுங்கள்முதலீடாக வீடு ஒன்றை வாங்குதல்
உங்களின் பணத்தை முதலீடு செய்வதற்கான பொதுவான வழிகளில் ஒன்றாக வீடு ஒன்றை வாங்குவது உள்ளது. இது வாழ ஒரு இடத்தை வழங்குகிறது, அத்துடன் வீட்டு விலைகள் அதிகரித்தால் காலப்போக்கில் பெறுமதியில் அதிகரிக்கலாம். மற்றவர்கள் பல சொத்துக்களை வாங்கி, குத்தகைக்கு விட்டு வாடகை வருமானத்தைப் பெறுவதன் மூலம் றியல் எஸ்டேட்டில் (real estate) முதலீடு செய்யக்கூடும்.
பாரம்பரிய முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, நிலவுடைமைச் சொத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பொருந்தும் ஒரு விடயமாக இருக்கும். அடமானங்கள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் சொத்துப் பழுதுபார்ப்புக்கள், வரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பரிவர்த்தனைகளை இது உள்ளடக்குகிறது.
Real estate முதலீடுகள் ஒரு முதலீட்டு portfolioவை பல்வகைப்படுத்துவதில் பங்கு வகிக்கலாம். இருப்பினும், அனைத்து முதலீட்டையும் போலவே, இதனுடன் தொடர்புடைய ஆபத்துக்களும் உள்ளன. சொத்துக்களின் விலைகள், பொருளாதாரம் மற்றும் வட்டி வீதங்கள், அமைவிடம் மற்றும் வீட்டுச் சந்தைக்கேற்ப கூடிக்குறையலாம்.
ஆதனச்சொத்துக்களில் முதலிடுவது பற்றி மேலும் அறியுங்கள்ஆபத்து மற்றும் வருவாய்
ஆபத்து என்பது முதலீட்டின் உண்மையான வருவாய், எதிர்பார்க்கப்படும் வருவாயிலிருந்து வேறுபடக்கூடிய சாத்தியம் மற்றும் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் ஒரு பங்கை அல்லது முழுவதையும் இழக்கக்கூடிய சாத்தியம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
ஆபத்து மற்றும் வருவாயைப் புரிந்துகொள்ளல்
ஆபத்து என்பது முதலீட்டின் உண்மையான வருவாய், எதிர்பார்க்கப்படும் வருவாயிலிருந்து வேறுபடக்கூடிய சாத்தியம் மற்றும் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் ஒரு பங்கை அல்லது முழுவதையும் இழக்கக்கூடிய சாத்தியம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
உங்களின் பணத்திலிருந்து வருவாய் ஈட்டுவதற்காக நீங்கள் முதலீடு செய்கிறீர்கள், ஆனால் கருத்தில்கொள்ள வேண்டியது வருவாய் மட்டுமல்ல. ஆபத்தும் வருவாயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பொதுவாக, முதலீட்டில் எவ்வளவு அதிக ஆபத்து இருக்குமோ அதேயளவுக்கு அதிக வருமானமும் கிடைக்கும்.
ஒரு முதலீட்டாளராக நீங்கள் வாங்க முன் ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மையை அறிந்திருப்பது அவசியம். ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மை குறைவெனில், குறைந்த ஆபத்தைக்கொண்ட முதலீடுகளைக் கொண்ட ஒரு போர்ட்ஃபோலியோவை நீங்கள் அனேகமாகத் தெரிவு செய்வீர்கள். அப்படியானால் வருவாய்க்கான சாத்தியமும் குறைவாகவே இருக்கும். ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மை அதிகமெனில், அதிக ஆபத்து முதலீட்டுடன் கூடிய ஒரு போர்ட்ஃபோலியோவை நீங்கள் அனேகமாகத் தெரிவு செய்வீர்கள். அப்படியானால் வருவாய்க்கான சாத்தியமும் அதிகமாக இருக்கும். ஆபத்து இல்லாத முதலீடுகள் என்று எதுவுமில்லை, ஆனால் சிலவற்றில் மற்றவற்றை விடக் குறைவான ஆபத்து உள்ளது.
ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மையை உங்களின் முதலீட்டை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பொறுத்தும் இருக்கலாம் – இது உங்களின் கால எல்லை (time horizon) என அறியப்படுகிறது. குறுகிய கால எல்லையைக் கொண்ட ஒருவர் குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளைத் தெரிவுசெய்ய விரும்பக்கூடும், அதே சமயம் நீண்ட கால எல்லையைக் கொண்ட ஒருவருக்கு அதிக ஆபத்துக் கொண்ட முதலீடுகளை நிர்வகிப்பது மிகவும் செளகரியமாக இருக்கக்கூடும். ஆபத்துக்கான உங்களின் சகிப்புத்தன்மையின் அளவு மற்றும் கால எல்லை ஆகியன உங்களின் தனிப்பட்ட முதலீட்டு இலக்குகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.
பல்வகைப்படுத்தல்
பல்வேறு முதலீடுகளுடனான பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை நீங்கள் வைத்திருந்தால், உங்களின் முதலீடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மோசமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும். சிறப்பாகச் செயல்படும் முதலீடுகளில் நீங்கள் சம்பாதிக்கும் லாபம், மோசமாக இருக்கும் முதலீடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுகிறது
வெவ்வேறு வகையான சொத்துக்களிலான கலப்பு முதலீட்டு வகைகளைக் கொண்டிருப்பது உங்களின் போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஒரே மாதிரியான ஆபத்து மற்றும் வருவாய்க்கான இயல்புகளைக் கொண்டிருக்கும் முதலீடுகள் சொத்து வகைகளின்படி குழுக்களாக்கப்படுகின்றன. மூன்று முக்கிய சொத்து வகைகள் உள்ளன:
சேமிப்புக் கணக்குகள், உறுதியளிக்கப்பட்ட முதலீட்டுச் சான்றிதழ்கள் (GICகள்), நாணயம், பணச் சந்தை நிதிகள் மற்றும் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் அரசாங்க மற்றும் நிறுவன நிதிப் பத்திரங்கள் போன்ற நிர்ணயிக்கப்பட்ட கால வைப்புகளை உள்ளடக்குகின்றது.
ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் முதிர்ச்சியடையும் அரசாங்க மற்றும் நிறுவன நிதிப் பத்திரங்கள், தெரிவுக்குரிய பங்குகள் மற்றும் பிற கடன் வழங்கல்களை உள்ளடக்குகின்றது.
பொதுவான பங்குகள், சில derivatives (உரிமைகள், உத்தரவாதங்கள், தெரிவுகள்), மாற்றத்தக்க நிதிப் பத்திரங்கள் மற்றும் மாற்றத்தக்க தெரிவுக்குரிய பங்குகளை உள்ளடக்குகின்றது.
முதலீட்டில் உள்ள ஆபத்துக்களின் வகைகள்
பல்வேறு வகையான முதலீடுகள் தொடர்பான ஆபத்துப்-பெறுமதிப் பரிமாற்றங்களைப் பார்ப்பதற்கு இந்த விளக்கப்படத்தைப் பார்க்கவும்.
ஊடாட்டமுள்ள முதலீட்டு விளக்கப்படம்ஆலோசனை பெறல்
உங்களின் நிதி இலக்குகளை அடைய உதவும் முதலீடுகளை எவ்வாறு தெரிவுசெய்வது என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால், ஒரு ஆலோசகருடன் இணைந்து பணியாற்ற நீங்கள் விரும்பக்கூடும்.
சரியான ஆலோசகரைத் தெரிந்தெடுப்பது உங்களுக்கு என்ன உதவி தேவை என்பதைப் பொறுத்திருக்கும். உங்களுக்கு விசேடத்துவமான ஆலோசனை தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசகரைத் தேடுங்கள்.
பின்வருவனவற்றில் ஆலோசகர்கள் உதவ முடியும்:
- முதலீடு
- நிதித் திட்டமிடல்
- காப்புறுதி
- வரித் திட்டமிடல்
- சொத்துத் திட்டமிடல்
பரிந்துரைக்கக்கூடிய ஆலோசகர் எவராவது இருக்கின்றாரா என உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கேளுங்கள். சாத்தியமான பல ஆலோசகர்களைச் சந்தியுங்கள். அவர்கள் பதிவுசெய்திருக்கும் பிரிவைச் சரிபாருங்கள். உங்களின் நிதி இலக்குகளை அடைய உங்களுக்கு உதவுவதற்கான அனுபவம், நிபுணத்துவம் மற்றும் நற்சான்றிதழ்கள் உள்ளன என்று நீங்கள் நம்பும் ஒருவரைத் தெரிவுசெய்யுங்கள்.